Advertisements

காங்கிரஸ் கட்சியில் ஓரிருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார்கள் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் திமுக சார்பில், பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து, கூட்டத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசிய போது, 1967 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆனால், அப்புறம் அவர்களால் ஆட்சிக்கு வர முடிந்ததா என்று கேள்வி எழுப்பினார்.
சொன்னால் கோபித்து கொள்வார்கள் என்று விமர்சித்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் ஓரிருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார்கள் என்றும், என்ன செய்வது கூட்டணியில் இருக்கிறார்கள் என்றும் கூறினார். தொடர்ந்து, பேசிய அவர் தான் செல்வப் பெருந்தகையை, ஒரு திருமண நிகழ்வில் சந்தித்துக் கொண்டதாகவும், அப்போது, கூட்டணியில் இருக்கிறார்கள் அதனால் தான் போட்டோவுக்கு போஸ் கொடுத்தாகவும் தெரிவித்தார்.
Advertisements


