அம்ரித் பாரத் ரெயில் பெட்டிகளை ரெயில்வே அமைச்சர் ஆய்வு!

Advertisements

சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டு வரும் அம்ரித் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார்.

Advertisements

அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் அவர் கூறியது,

நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்துக்கு ரெயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஏழை எளிய மக்களும் வந்தே பாரத் ரெயில்களில் பயணிக்கும் அனுபவத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகக் குறைந்த கட்டணத்தில் அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், தற்போது படுக்கை வசதி கொண்ட அம்ரித் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் நிறைவடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும்.

அந்த வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 அம்ரித் ரெயில்களை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *