Rahul Gandhi:”அரசியலமைப்பு மீதான தாக்குதலை ஏற்க முடியாது!

Advertisements

புதுடில்லி: ‘பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அரசியலமைப்பை தாக்குகின்றனர். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ எனக் காங்கிரஸ் எம்.பி., ராகுல் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மவுனம் ஏன்?: கார்கே கேள்வி

இதுகுறித்து கார்கே எக்ஸ் சமூகவலைளத்தில் கார்கே வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: முக்கியமான பிரச்னைகள்குறித்து இன்று பிரதமர் மோடி ஏதாவது பேசுவார் என்று நாடு எதிர்பார்த்தது. ஆனால் பேசாமல் பிரதமர் மோடி மவுனம் ஏன்?.

வன்முறை

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த ரயில் விபத்து குறித்தும், 13 மாதங்களாக மணிப்பூரில் நடக்கும் வன்முறை குறித்தும் பேசாமல் பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார். அவரது இன்றைய உரையில் சமீபத்திய வன்முறைபற்றி எந்தக் கவலையும் தெரிவிக்கவில்லை. ஜாதி மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் மோடி முற்றிலும் அமைதியாக இருந்து வருகிறார்.

எதிர்க்கட்சிகளுக்கு மோடி அறிவுரை கூறுகிறார். கடந்த 10 வருடங்களாகப் பொதுமக்களால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டு, 50 ஆண்டு கால எமர்ஜென்சியை நினைவூட்டுகிறார்கள். மக்கள் பிரதமர் மோடிக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். இருந்த போதிலும், அவர் பிரதமராகி விட்டதால் உழைக்க வேண்டும்.

நாங்கள் தொடர்ந்து சபையிலும், தெருக்களிலும், அனைவரின் முன்னிலையிலும் மக்களின் குரலை எழுப்புவோம். அரசியலமைப்பை பாதுகாப்போம். வாழ்க ஜனநாயகம். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *