Raayan First Look: வைரலாகி வரும் தனுஷின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Advertisements

இணையதளங்களில் வைரலாகி வரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தனுஷின் ரசிகர்கள் பல்வேறு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ல் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், ‘திருச்சிற்றம்பலம்’. இதை மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியிருந்தார். இந்நிலையில், தற்போது சன் பிக்சர்ஸ் சார்பில் சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ள புதிய படத்துக்கு ‘ராயன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். இது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 50வது படமாகும். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று மாலை சன் பிக்சர்ஸின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

வடசென்னையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்ததாக எக்ஸ் தளத்தில் தனுஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையதளங்களில் வைரலாகி வரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தனுஷின் ரசிகர்கள் பல்வேறு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முன்பு 2017ல் தனுஷ் இயக்கத்தில் வெளியான படம், ‘ப.பாண்டி’. இதில் தனுஷ், ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தனர். தற்போது உருவாகியுள்ள ‘ராயன்’ படம், தனுஷ் இயக்கியுள்ள 2வது படமாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *