
தமிழக ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக முதலமைச்சரை ஆலோசனைக்கு வருமாறு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் முதலமைச்சரை ஆலோசனைக்கு வருமாறு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதல் அளிக்க கோரி அனுப்பி வைத்த மசோதாக்கள் பல திருப்பி அனுப்பிய நிலையில் ஆளுநருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு விசாரணை இன்று வரவுள்ள நிலையில் , நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து முதலமைச்சரை ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்த பிறகு சந்தித்து பேசலாம் என, அரசு தரப்பில் ஆளுநருக்கு பதில் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம் குறித்து ஆளுநர், முதலமைச்சர் அமர்ந்து பேசி தீர்வு காணலாம் என, உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


