குற்றங்களைத் தடுக்க புதுச்சேரி காவல்துறை தீவிரம் – அமைச்சா் நமச்சிவாயம் உறுதி..!

புதுச்சேரியில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் காவல் துறை முடுக்கி விடப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக முன்பகை காரணமாகத் தொடா் கொலைகள் நடந்துள்ளதாகவும், இதைக் கட்டுப்படுத்தும் வகையிலும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையிலும் காவல்துறை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

புதுச்சேரியில் ஆளும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *