Puducherry Assembly Session 2024: சட்டசபைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த எம்.எல்.ஏ!

Advertisements

அங்காளன் எம்.எல்.ஏ. தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் திருபுவனை தொகுதியிலிருந்தே மோட்டார் சைக்கிளில் சட்டசபைக்கு வந்தார். மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டி வர அவர்பின் சீட்டில் அமர்ந்து வந்தார்.

புதுச்சேரி:புதுச்சேரி திருபுவனை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன்.இவர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். இவருக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டிருந்தது. இந்தக் கார் பழுதடைந்து விட்டது. இதனால் பழைய காரை மாற்றி, புதிய கார் வழங்கும்படி சட்டசபை செயலகத்திடம் ஒப்படைத்திருந்தார். ஆனால் அவருக்கு மாற்று காரோ, பழைய காரைப் பழுது நீக்கியோ தரப்படவில்லை.

இதனால் அங்காளன் எம்.எல்.ஏ. தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் திருபுவனை தொகுதியிலிருந்தே மோட்டார் சைக்கிளில் சட்டசபைக்கு வந்தார். மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டி வர அவர்பின் சீட்டில் அமர்ந்து வந்தார்.

இதுகுறித்து அங்காளன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-எம்.எல்.ஏ.வான எனக்கு அரசு தரப்பில் வழங்கிய கார் பழுதடைந்தது. பலமுறை காரை மாற்றித் தரக்கோரி அதிகாரிகளிடம் கேட்டேன். ஆனால், அவர்கள் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மற்றவர்களுக்குப் புதிய கார் தந்துள்ளனர். எனக்கு இயங்கும் காரைக்கூட சீரமைத்து தரவில்லை. அதிருப்தியடைந்தாலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வந்தேன் எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *