
இந்தியாவிலேயே முதன்முறையாக மும்பையில் தனியார் நிறுவனத்தின் சார்பில் கணித அறிவியல் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
லோதா கட்டுமான நிறுவனம், லோதா அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் மும்பையில் லோதா கணித அறிவியல் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற விழாவில் லோதா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அபிசேக் லோதா உள்ளிட்டோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தனர்.
குமார் மூர்த்தி தலைமையிலான இந்த நிறுவனத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கணித அறிவியல் நிலையங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கணிதவியல் வல்லுநர்கள் இதில் பங்கேற்க உள்ளதாக, அபிசேக் லோதா தெரிவித்தார்.



