Preity Mukhundan : ஒரு சைடு மாடலிங்.. ஒரு சைடு சினிமா.. Star படத்தில் கலக்கிய திருச்சிகார பொண்ணு!

Actress Preity Mukhundan : பிரபல நடிகர் கவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்த திரைப்படம் தான் ஸ்டார். இந்தத் திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை தான் ப்ரீத்தி முகுந்தன்.

திருச்சியில் பிறந்து அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த பிரபல நடிகை ப்ரீத்தி முகுந்தன், கடந்த 2001ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி பிறந்தவர், அவருக்கு வயது 23.

திருச்சியில் உள்ள கல்லூரியில் பயின்று வரும் பொழுதே, அங்குள்ள நடன குழுக்களில் இணைந்து பல மேடைகளில் நடனமாடியுள்ள பிரீத்தி, சிறுவயது முதலையே பரதநாட்டிய கலையைக் கற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பல மேற்கத்திய நடன கலைகளையும் அவர் கற்றுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபொழுது, மாடலிங் துறையில் அவர் களமிறங்கினார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் மற்றும் பிற விளம்பர படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

ஒரு சில சூப்பர் ஹிட் இசை ஆல்பங்களில் பணியாற்றியுள்ள ப்ரீத்தி முகுந்தன், அண்மையில் வெளியான நடிகர் கவினின் ஸ்டார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அது மட்டுமில்லாமல் பான் இந்தியா திரைப்படமாக விரைவில் வெளியாகவுள்ள “கண்ணப்பா” திரைப்படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார் ப்ரீத்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *