
நாட்டுக்கோழி வளர்ப்பு சிறந்தது என்று சொல்வதற்கு காரணம் அது இயற்கையான சூழலில் வளர்வது தான். தற்போது கிராமப்புறங்களில் தான் நாட்டுக்கோழி வளர்க்கப்படுகிறது. நாட்டுக்கோழிகளை அனைவரும் எந்தச் சிரமமும் இன்றிவளர்கலாம்…
நாட்டுக்கோழி வளர்ப்பு ஒரு பொழுது போக்காகமட்டும் இல்லாமல், மக்களின் அவசர தேவையைப் பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது. ஒரு நாட்டு கோழி முட்டையிலிருந்து குஞ்சாகி வெளியே வந்து 120 நாட்கள் ஆன பிறகு அது இறைச்சிக்காகப் பயண்படுத்தபடுகிறது. நாட்டுக்கோழி வாழும் காலத்தில் பல்வேறு வகையான சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது.
நிலங்களில் இருக்கும் கம்பு, சோளம், அரிசி, புல், கீரை, காய்கறி வகைகள் மற்றும் புழு, பூச்சிகளைக் தின்று வளர்கிறது. இதனால் கொழுப்பைவிடப் புரதச்சத்து அதிக அளவில் இருக்கிறது. 100 கிராம் நாட்டுக்கோழியில் 4 கிராம் கொழுப்புதான் இருக்கிறது. 100 கிராம் பிராய்லரில் 23 கிராம் கொழுப்பு இருக்கிறது. 100 கிராம் நாட்டுக்கோழியில் 21 கிராம் புரதம் இருக்கிறது.
அதுவே 100 கிராம் பிராய்லரில் 16 கிராம் புரதம்தான் இருக்கிறது. வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல் வளர்க்கப்படுகிறது. தற்போது தொழில் ரீதியாகக் கூண்டு முறையில் வளர்க்கப்படும் கோழிகள் நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டு வளர்க்கப்படுகின்றன.

நாட்டுக் கோழி வளர்ப்பு:
நாட்டுக் கோழி 20 வருடங்களுக்குப் முன் கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படும். நாட்டுக் கோழி வளர்ப்பு மூலம் வீடுக்கு தேவையான கறி, முட்டை கிடைக்கின்றது. அத்துடன் கோழி மற்றும் முட்டைகளை விற்றும் வந்தனர். நாட்டுக் கோழி வளர்ப்பை நடமாடும் ஏடிஎம் என்றும் சொல்லலாம் தேவைப்படும் நேரத்தில் விற்று பணம் சம்பாதிக்கலாம்.
குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் தொழிலாக நாட்டுக் கோழி வளர்ப்பு தற்போது மாறியுள்ளது. வறட்சி மற்றும் ஆள் பற்றாக்குறை காரணமாக விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் இந்தத் தொழிலைப் பல விவசாயிகள், படித்த இளைஞர்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நாட்டுக் கோழி வளர்க்கும் முறைகள்:

நாட்டு கோழி முட்டை மற்றும் இறைச்சி மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. தரமான முட்டை, இறைச்சி கொண்டு சேர்க்கும் அளவு உற்பத்தி இல்லை. நாட்டுக்கோழி வளர்ப்புதொழிலை மேற்கொண்டால் நிரந்தர வருமானமும் அதிக லாபமும் பெற முடியும்.
நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும் இடம்:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ளது. அங்கு நாட்டுகோழி மற்றும் நாட்டுகோழி குஞ்சுகள் கிடைக்கும். தினம் காலை மற்றும் மாலை 2 மணி நேரம் பராமரிப்பு செய்தால் போதும்.
நாட்டு கோழி பராமரிப்பு முறைகள்:

பண்ணை இருக்கும் இடத்தில் மற்ற பறவைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற பறவைகள்மூலம் தான் கோழிகளுக்கு நோய் ஏற்படுகிறது. பண்ணை இருக்கும் அதிக சத்தம் வராமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது. கோழி குஞ்சுகளுக்கு முதல் 48 நாட்கள் புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே தர வேண்டும். குஞ்சுகளுக்குப் பனங்கருப்பட்டியை தண்ணீரில் கொடுக்க வேண்டும். பிறகு கீரை மற்றும் கரையான்களை கொடுக்கலாம். வெங்காயம், தக்காளி, கேரட் போன்ற காய்கறி கழிவுகளைப் பொடியாக நறுக்கி கொடுக்கலாம். இதன் மூலம் தீவனச்செலவு குறையும்.
நாட்டு கோழிகளை வளர்ப்பது எப்படி?
பண்ணையில் தேங்காய் நார் அல்லது மரத்தூள் 2 இஞ்ச் அளவு கொட்ட வேண்டும். இவை கெட்டியாகிவிடாமல் இருக்க இரண்டு நாள்களுக்கு ஒரு முறை கிளறி விட வேண்டும். கோழிகள் சண்டையிட்டு கொத்துவதை தவிர்க்க 20 முதல் 30 நாள்கள் ஆன குஞ்சுகளின் மூக்கை வெட்ட வேண்டும்.80 நாட்கள் நாட்கள்வரை வளர்த்து விற்பனைக்கு அனுப்பலாம். அதற்கு மேல் வளர்த்தால் தீவனச் செலவு அதிகமாகும்.
நாட்டு கோழி குஞ்சுகளை வளர்ப்பது எப்படி?

இருட்டு அறையில் 30 அடி நீளம், 2 அடி உயரம் அட்டை அல்லது தகடால் வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும். காற்று அதிகம் புகாதவாறு இருக்க வேண்டும். குஞ்சுகளுக்கு வெப்பம் கொடுக்க அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 (ஒரு குச்சிக்கு ஒரு வாட்) விதாம் பொருத்த வேண்டும். அதன்மேல் பேப்பர் பொட்டு அதனுள் தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் வைக்க வேண்டும். தினசரி பேப்பரை மாற்ற வேண்டும்.
நாட்டு கோழி வகைகள்:
கொண்டை கோழி, கழுகுக் கோழி, சண்டை கோழி (அசில்), குருவு கோழி (சிறுவிடை கோழி), கருங்கால் கோழி (கடக்னாத்) ஆகிய கோழி வகைகளைத் தனித்தனியே அடையாளம் காண முடியாது போனாலும் அதன் வண்ணங்களை வைத்து அடையாளம் காணலாம்.

