எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி!

 சிலர் நாட்டின் அரசியலமைப்பு சட்டமும், ஜனநாயகமும் தங்கள் சட்டைப்பையில் இருப்பதாக நினைக்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தில்லியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல், வேளாண்மை மேம்பாடு ஆகியவை வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.
விவசாயிகளை வேளாண் தொழில் முனைவோராக மாற்றுவதே தனது அரசின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார். சிலர் நாட்டின் அரசியலமைப்பு சட்டமும், ஜனநாயகமும் தங்கள் சட்டைப்பையில் இருப்பதாக நினைக்கின்றனர் என விமர்சித்தார். இவர்கள் தற்போது ஆட்சியில் இல்லாத நிலையிலும், தமக்கு அளவுக்கு மீறிய உரிமை உணர்வு இருப்பதாக எண்ணத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *