அபுதாபியில் இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு !இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Advertisements

அபுதாபி: பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபி வந்தடைந்தார்.
இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு அபுதாபி வந்த மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பிறகு, அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயாத் அல் நஹ்யானை மோடி சந்தித்து பேசினார்.

Advertisements


இந்த பயணத்தில் அபுதாபி அதிபரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில், துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடம், தேசியக்கொடி வண்ணத்திலும் ஒளிர்ந்ததுடன், பிரதமர் மோடியின் புகைப்படமும் அதில் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *