நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசை அப்புறப்படுத்த மக்கள் தயாராகி விட்டார்கள். மதத்தையும், கோவிலையும் காட்டி பாஜகாவால் தமிழ் நாட்டில் ஓட்டு வாங்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
கடந்த ஆண்டு சொன்னபடி மதிமுக அமைப்பு தேர்தல் நடைபெற்று முடிந்தது. பொதுக்குழு முடிவின் படி ஆளுநரை திரும்ப பெற பொதுமக்கள் 50,000 கையெழுத்துடன் குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது. வாக்குச்சாவடி முகவர் பணி 80 சதவீதம் முடிந்து விட்டது.
கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக மத்திய அரசு ஜனநாயக விரோதமாக செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் கொள்கை படி செயல்பட்டு ஜனநாயக படுகொலை செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசை தூக்கி ஏறிய மக்கள் தயாராகி விட்டார்கள்.
ஒட்டுமொத்த அதிகாரத்தையும் டெல்லியில் குவித்து வருகிறது.கொடுத்த வாக்குறுதியை காற்றிலே பறக்கவிட்டு காஷ்மீர் பிரச்சினையில். மாநில அரசின் உரிமைகளை பறித்து வருகிறது. மாநிலத்தின் கலாச்சாரம் பண்பாடுகளை பாஜக அழித்து வருகிறது.
இந்தியா கூட்டணி நெருடல் இல்லாமல் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். சுதந்திர இந்தியாவில் நெருக்கடி நிலையை விட மோசமான சட்டங்களை கொண்டு வருகிறார்கள். திராவிட மாடல் ஆட்சி வெற்றிகரமாக நடைபெறுகிறது. இதை பின்பற்ற மற்ற மாநிலங்களும் நினைக்கின்றன.
இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசு ஒரு வஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றவாளி என்று சுட்டிக் காட்டிய சைலேஷ் குமார் ஐஜிக்கு பதவி உயர்வு வழங்குவதை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இந்திய கூட்டணியில் கருத்து மோதல்கள் இல்லை. பாஜக வளர்ந்து விட்டது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைதளங்கள் தான் அரசியல் கட்சிகளுக்கு பலமும் பலவீனமும். பல கட்சிகள் சேரும் போது சில கருத்து மோதல்கள் வரும் அதனை பொருட்படுத்த வேண்டியதில்லை.
புயல் வெள்ள பாதிப்புகளை இந்த அரசும் 2015 ல் இருந்த அரசும் எதிர்கொண்ட விதத்தை மக்கள் பார்ப்பார்கள்.ஆனால் திமுக அரசு திறமையாக கையாண்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு இந்தியா கூட்டணியின் பேச்சுவார்த்தை நடைபெறும். பெரிய ஜனநாயக நாடுகளில் வாக்குச்சீட்டு முறை இருக்கிறது. ஈ.வி.எம்.இயந்திரம் தயாரிக்கும் ஜப்பானில் கூட வாக்குச்சீட்டு முறை தான் இருக்கிறது.ஈ.வி.எம் இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்பிருக்கிறது என்று நிபுணர்கள் எல்லாம் சொல்கிறார்கள்.
ஆளுநர் முதலமைச்சர் சந்திப்பின் முடிவை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றை அச்சுறுத்தல்காக பயன்படுத்துகிறார்கள்
பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் பொறுப்புள்ளவர்கள் அவர்கள் ஆதாரம் இல்லாமல் எதையும் பேசமாட்டார்கள்
ஆனால் பிரபாகரன் குறித்து ஆதாரம் இருப்பதை வைத்து தான் எதுவும் நான் சொல்ல முடியும்.
துரை வைகோ தேர்தலில் போட்டியிடுவாரா என்பது கட்சி முடிவெடுக்கும் நேரத்தில் தெரியும் என்று கூறினார்.

