
அபுதாபியில் பிறந்து மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நல்ல படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை தான் பார்வதி நாயர்.
கடந்த 1992 ஆம் ஆண்டு அபுதாபியில் பிறந்த நடிகை பார்வதி நாயர், மலையாள குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான “பாப்பின்ஸ்” என்கின்ற மலையாள திரைப்படம்மூலம் இவர் அறிமுகமானார்.
தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கால் பதித்த இவர் “உத்தம வில்லன்”, “மாலை நேரத்து மயக்கம்”, “கோடிட்ட இடங்களை நிரப்புக” மற்றும் “எங்கிட்ட மோதாதே” உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்பொழுது தமிழில் உருவாகி வரும் “ஆலம்பனா” என்கின்ற திரைப்படத்திலும், தளபதி விஜயின் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படத்திலும் பார்வதி நாயர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

