
பாலஸ்தீன அகதிகள் முகாம் அருகில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் எல்லைப் பகுதியில் பாலஸ்தீன அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமின் அருகே இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், அயின் அல் கில்வே என்னுமிடத்தில் செயல்பட்டு வந்த ஹமாஸ் ஆயுதக் குழுக்களின் பயிற்சி முகாமைக் குறிவைத்துத் தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த இந்த இடத்தை ஹமாஸ் தேர்வு செய்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. இஸ்ரேலின் இந்தக் கூற்றை ஹமாஸ் மறுத்துள்ளது.


