
திமுக வெற்றிகரமாக நிறைவேற்றியத் திட்டங்களையே பழனிச்சாமி காப்பி பேஸ்ட் செய்து வாக்குறுதியாக அறிவித்திருக்கிறார் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
இயற்கை வளங்கல் துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தளப் பதிவில், அதிமுக சார்பில் முதல்கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த எடப்பாடி பழனிசாமி திமுக அரசின் திட்டங்களையே வழிமொழிந்திருக்கிறார் என்றும், மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், கலைஞர் கனவு இல்லம் ஆகியவற்றுக்கு அதிமுகவே நற்சான்றிதழ் கொடுத்துவிட்டது என்றும் கூறினார்.
தொடர்ந்து, திமுக வெற்றிகரமாக நிறைவேற்றியத் திட்டங்களையே பழனிச்சாமி காப்பி பேஸ்ட் செய்து வாக்குறுதியாக அறிவித்திருக்கிறார் என விமர்சித்தார். மேலும், புதியதாக எதையும் வாக்குறுதியாகத் தர இயலாத பரிதாப நிலைக்கு பழனிசாமி போய்விட்டாரே என்றும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, திமுக அரசின் 2.0 ஆட்சி உறுதியாகிவிட்டதை பழனிசாமியே எம்.ஜி.ஆர் மாளிகையில் அமர்ந்து சங்கநாதம் செய்திருக்கிறார் என தெரிவித்தார்.



