
நாட்டைப் பற்றிப் பேசியதால் நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைவேன் என்று பாகிஸ்தான் நடிகை நவுஷீன் ஷா தெரிவித்துள்ளார்.
இஸ்லாமபாத்: பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வரும் கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான தலைவி படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது இவர் ‘சந்திரமுகி -2’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகை கங்கனா ரனாவத் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்தைச் சொல்லிப் பரபரப்பை ஏற்படுத்துவார்.இந்நிலையில், கங்கனாவை நேரில் சந்தித்தால் கன்னத்தில் அறைவேன் எனப் பாகிஸ்தான் நடிகை நவுஷீன் ஷா தெரிவித்துள்ளார். நடிகை கங்கனா ரனாவத்தை ஒருமுறையாவது சந்திக்க விரும்புகிறேன். அவ்வாறு நான் அவரைச் சந்திக்கும்பட்சத்தில் அவரை இரண்டு முறை கன்னத்தில் அறைவேன்.
அவர் எங்கள் நாட்டைப் பற்றியும் பாகிஸ்தான் ராணுவம் குறித்தும் சர்ச்சையான கருத்துகளைக் கூறுகிறார். மற்ற நாட்டைப் பற்றி எதற்காக அவர் பேச வேண்டும். உங்கள் நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் திரைப்படங்களைப் பாருங்கள். உங்கள்மீதான சர்ச்சைகள், முன்னாள் காதலன் குறித்து பேசுங்கள்.” என ஆதங்கமாகப் பேசியுள்ளார்.

