சீதாப்பழத்தில் ஓவியம்!

Advertisements

Custard apple | Painting | Kuniyamuthur | Coimbatore | Indian Independence Day

சுதந்திர தினம் வருவதை முன்னிட்டு சுதந்திரத்திற்காகப் போராடிய தலைவர்களைச் சீதாப்பழத்தில் ஓவியமாக வரைந்து அசத்திய வாலிபர்...

குனியமுத்தூர்: சுதந்திர தினம் வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தற்போது சுதந்திர தின நிகழ்ச்சிகள் களைகட்ட தொடங்கி உள்ளன. இதன் ஒருபகுதியாகக் கோவையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சீதாப்பழத்தில் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட 20 தலைவர்களின் ஓவியங்களை வரைந்து அசத்தி உள்ளார்.

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் ராஜா. ஓவியரான இவர் பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார். தற்போது சுதந்திர தினம் வருவதை முன்னிட்டு சுதந்திரத்திற்காகப் போராடிய தலைவர்களை ஓவியமாக வரைய விரும்பினார். அதுவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என யோசித்த அவர், சீதாப்பழத்தில் 20 தலைவர்களின் ஓவியத்தை வரைந்தால் என்ன என்ற யோசனை அவருக்குத் தோன்றியது. இதையடுத்து அவர் சீதாப்பழங்களை வாங்கி வந்தார். அதில் பச்சை, ஆரஞ்சு, வெள்ளை, நீலம், சிவப்பு ஆகிய வண்ணங்களைக் கொண்டு தலைவர்களின் படம் மற்றும் தேசியை கொடியை வரைந்தார்.

Custard apple | Painting | Kuniyamuthur | Coimbatore | Indian Independence Day

ஒவ்வொரு சீதாப்பழத்திலும் ஒவ்வொரு தலைவர்களின் படங்களை வரைந்தார். அதன்படி சீத்தாப்பழத்தில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், சுப்பிரமணிய பாரதியார், விவேகானந்தர், வீரபாண்டி கட்டப்பொம்மன், வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரனார், மருது பாண்டியர், அம்பேத்கர், ஜவகர்லால் நேரு, பகத்சிங், ராஜேந்திரபிரசாத், சர்தார் வல்லபாய்படேல், பாலகங்காதர திலகர், அப்துல்கலாம், சந்திரசேகர ஆசாத், காமராஜர், ராதாகிருஷ்ணன், லாலா லஜபதிராய், அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை ஓவியமாக வரைந்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *