மிஸ்டர் இந்தியா மணிகண்டன் திடீர் உயிரிழப்பு.. விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி!

Advertisements

இந்திய அளவில் ஆணழகன் பட்டம் வென்ற திருவள்ளூரை சேர்ந்த நபர் திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் மணிகண்டன். கடுமையான உடற்பயிற்சி மட்டுமின்றி பல போட்டிகளில் கோலோச்சி இந்திய அளவில் ஆணழகன் பட்டத்தை வென்றவர்.

41 வயதான இவர், தனது அக்காள் கணவரை போன்று தாமும் ஜிம் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு இந்திய அளவில் ஆணழகன் பட்டத்தை வென்றார். இதனைத்தொடர்ந்து தாம் வசிக்கும் பகுதியில் உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வந்த மணிகண்டன், பல இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தார்.

மேலும் தான் கற்றுக் கொண்டதை இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்து தன்னை போல மிஸ்டர் இந்தியா போன்ற பட்டங்களை வெல்வதற்கு ஆயத்தப்படுத்தி வந்தார். இந்த நிலையில், வயிற்று வலி காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மணிகண்டன் நேற்று கொண்டு செல்லப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

பல போட்டிகளில் பரிசுகளை வென்றெடுத்த மணிகண்டன், அளவுக்கு அதிகமாக ஊக்க மருந்தை எடுத்துக் கொண்டதே இறப்புக்கு வழிவகுத்ததாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்கள் கொடுத்த அறிவுறுத்தலின்பேரில் ஊக்கமருந்து எடுத்த எடுத்துக் கொண்ட மணிகண்டன், போட்டி நடந்த மேடையில் மயங்கி விழுந்தாக அவரது தாயாரும் கூறினார்.

அன்றைய நாட்களில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஊக்கமருந்தால் உடல் உபாதைகள் ஏற்பட்டு மணிகண்டன் இறந்ததாகக் கூறப்படும் வேளையில், இவரது வளர்ச்சியை பொறுக்க முடியாமல் அதிகளவில் ஊக்கமருந்தை கொடுத்து நண்பர்கள் சூழ்ச்சி செய்ததாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *