
President Droupadi Murmu | Opposition | Manipur Violence
மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி திரவுபதி முர்முவிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முறையிட்டனர்…
டெல்லி : மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் களநிலவரத்தை ஆராய எதிர்க்கட்சி கூட்டணி எம்.பி.க்கள் 21 பேர் கடந்த 30-ம் தேதி மணிப்பூர் சென்றனர். அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட எம்.பி.க்கள் அம்மாநில கவர்னரையும் சந்தித்தனர். பின்னர், எம்.பி.க்கள் குழு டெல்லி திரும்பியது.
President Droupadi Murmu | Opposition | Manipur Violence | Restore Peace
இந்நிலையில், மணிப்பூரில் களநிலவரத்தை ஆய்வு செய்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தனர். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி திரவுபதி முர்முவிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முறையிட்டனர். மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிடைத்த தகவல்களையும், கள நிலவரத்தையும் அறிக்கையாக ஜனாதிபதியிடம் வழங்கினர்.




