
சங்கராபுரம் அருகே பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தினை ஆக்கிரமிப்பு செய்யத் துடிக்கும் தனிநபர்மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பட்டியலின மக்கள் மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரப் பகுதியில் வசிக்கக்கூடிய வீடற்ற பட்டியல் இனத்தைச் சார்ந்த ஏழை எளிய மக்களுக்குச் சங்கராபுரம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் 144 வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது, தற்போது அந்த இடத்தில் முறையாக அளவீடு செய்யப்பட்டு பயனாளிகள் வீடு கட்டி குடியேறுவதற்கு பொதுமக்கள் இடத்தினை சுத்தம் செய்யும்போது சில தனிநபர்கள் போலி ஆவணங்களைத் தயார் செய்து இந்த மொத்த இடம் தனக்கே சொந்தம் எனச் சொந்தம் கொண்டாடிவருகின்றனர்.
மேலும் இங்கு யாரும் வீடு கட்ட கூடாது எனவும் அப்படி கட்டினால் அவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள் என அதே பகுதியைச் சேர்ந்த சில தனிநபர்கள் அடியாட்களைக் கொண்டு தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பட்டியலிட மக்களை மிரட்டி விடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பட்டியல மக்களுக்காக அரசு சார்பில் வழங்கப்பட்ட இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு பட்டியலில் இன மக்களை வீடு கட்டி குடியேற விடாமல் அடியாட்களைக் கொண்டு தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா இடத்தினை ஆக்கிரமிப்பு செய்யும் தனிநபர்கள்மீது மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சி இருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

