ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது!

லக்னோ:

உத்தரபிரதேசத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து உள்ளன. விபத்துகளைக் குறைக்க சாலை விதிகளைக் கடுமையாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

இதற்காக ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் போக்குவரத்து கமிஷனர் பிரஜேஷ் நராயண் சிங் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது,

சாலை பாதுகாப்பு தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில், விபத்துகள் அதிகரித்து வருவதும், ஆண்டுக்கு 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *