
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தீபாவளியை முன்னிட்டுத் தன் பெயரக் குழந்தைகளுடன் கடைக்குச் சென்று அவர்களுக்கு
வெடிகள் வாங்கிக் கொடுத்துள்ளார்.
தீபாவளி என்றாலே வெடிகளை வாங்கிக் கொளுத்திக் கொண்டாடுவது சிறார்களுக்குப் பெருமகிழ்ச்சியளிக்கும். இதற்கு
ஏழை எளியோர், தொழிலாளர்கள், நடுத்தரக் குடும்பத்தினர் யாரும் விதிவிலக்கல்ல.
அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள கடைக்குப் பெயரக் குழந்தைகளுடன் சென்று அவர்களுக்கு வெடிகள்
வாங்கிக் கொடுத்த காட்சியை அமைச்சர் நிதின் கட்கரி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.




