Nilgiris District: புதிய மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி துவக்கம்!

Advertisements

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் புதிய மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி இன்று துவங்கப்பட்டது.

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது காட்டேரி பூங்கா இங்கு இந்த ஆண்டு முதல் பருவத்திற்கான மலர் செடிகள் நடவு செய்யும் பணியினை தோட்டக்கலை துணை இயக்குனர் அப்ரோஸ் பேகம், இன்று துவக்கி வைத்தார்.

வரும் ஏப்ரல் மே மாதம் கோடை சீசன் துவங்க உள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் வகையில் மேரி கோல்டு, பிரெஞ்சு மற்றும் ஆப்பிரிக்கா வகை பிளாக்ஸ், சூரியகாந்தி, ஆண்ட்ரினம், பெட்னியம், பால்சம், பெகோனியா, போன்ற முப்பது வகை மலர் விதைகள் ஜெர்மனி, பிரான்ஸ், நகர்லாந்து, கொல்கத்தா, காஷ்மீர், போன்ற இடங்களிலிருந்து பெறப்பட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தனர்.

கடந்த 2023- 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 711 சுற்றுலா பயணிகள் காட்டேரி பூங்காவிற்கு வருகை புரிந்துள்ளனர் என்றும் அதேபோல் வரும் ஏப்ரல் மே மாதம் நடைபெற உள்ள கோடை சீசனுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தோட்டக்கலை துணை இயக்குனர் அப்ரோஸ் பேகம் தெரிவித்தார் நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர்  விஜயலட்சுமி, மற்றும் தோட்டக்கலை அலுவலர் (பொறுப்பு) சபாரத்தினம், மற்றும் பண்ணை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *