
நெல்லை இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் மகள் கனிஷ்கா தன் கணவர் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளார். கணவர் பல்ராம் சிங் வரதட்சணையாக இருட்டுக்கடை உரிமையை கேட்பதாகவும், இருட்டுக்கடை உரிமையை மாற்றித் தரும்படி கேட்டு கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கவிதாசிங்கின் மகள் கனிஷ்கா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.கணவர் பல்ராம் சிங் வரதட்சணையாக இருட்டுக்கடை உரிமையை கேட்பதாகவும், இருட்டுக்கடை உரிமையை மாற்றித் தரும்படி கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
திருமணம் முடிந்து 40 நாட்களே ஆகியுள்ள நிலையில் வரதட்சணை புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கவிதா சிங் அளித்த புகாரில் கூறியதில் , என்னுடைய மகள் ஸ்ரீகனிஷ்காவிற்கும், கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ,வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கும் விஷயத்தை உனது தாய் தந்தையிடம் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். இதனால், வேதனை அடைந்த கனிஷ்கா, கடந்த மார்ச் மாதம் வீட்டிற்கு வந்துவிட்டார். மறுநாள் பல்ராம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த கனிஷ்கா கடந்த மார்ச் 15ம் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.மறுநாள் இரவு, பல்ராம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் கவிதா சிங்கின் வீட்டிற்கு வந்து, கனிஷ்காவுடன் நல்ல முறையில் வாழ வேண்டுமென்றால் கூடுதல் வரதட்சணை தர வேண்டும் என்றும், நெல்லையில் இயங்கி வரும் இருட்டுக்கடை கடையை பல்ராம் சிங்கின் பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்றும் மிரட்டினர். இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
