திருப்பரங்குன்றம் கங்கை தீர்த்தக் குளம் சீரழிவு – நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

திருப்பரங்குன்றம் கங்கை தீர்த்தக் குளத்தைப் போர்க்கால அடிப்படையில் தூர்வாரித் தூய்மைப்படுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அறுபடை வீடுகளில் முதற்படை வீடான வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பரங்குன்றத்தில், புனிதமான “கங்கை தீர்த்தக் குளம்” நச்சுக்குட்டையாக மாறுவதை, தவெக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். புனித குளத்தில், தற்போது மீன்கள் மர்மமான முறையில் கூட்டம் கூட்டமாகச் செத்து மிதக்கும் அவலக் காட்சி அரங்கேறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கோவில் வளாகங்களில் வெறும் விளம்பரத்திற்காகவும் சமூக வலைதளங்களில் ‘ஆய்வு ரீல்கள்’ போடுவதற்காகவும் மட்டுமே வலம் வருகிறார் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் என்று விமர்சித்துள்ளார்.

தவெக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கங்கை தீர்த்தக் குளத்தைப் போர்க்கால அடிப்படையில் தூர்வாரித் தூய்மைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இக்குளத்தை உடனடியாகச் சீரமைக்கத் தவறினால், பக்தர்களையும் பொதுமக்களையும் திரட்டி பாஜக சார்பில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *