பிரான்ஸ் போராட்டங்களை அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்துகின்றனர் – இமானுவல் கண்டனம்!

பிரான்ஸில் நிலவும் போராட்ட சூழலைச் சில வெளிநாட்டுத் தலைவா்கள் தங்களின் சொந்த அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதாக பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

பிரான்ஸில் விலைவாசி உயா்வு, பள்ளிகளின் மோசமான உள்கட்டமைப்பைக் கண்டித்து வெடித்துள்ள போராட்டங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய அமெரிக்க அதிபா் டிரம்ப், இக்கலவரங்களுக்கு முஸ்லிம் குடியேறிகளே காரணம் என்று விமர்சித்திருந்தார். இது குறித்து பேசிய பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரான்ஸ் நகரங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் வன்முறைகளுக்குப் பிறகு, வெளிநாடுகளில் இருந்து திட்டமிட்டுத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

முஸ்லிம்களும், குடியேறிகளும் நாட்டை ஆக்கிரமித்துவிட்டதாகக் கூறப்படும் தகவல்கள் அப்பட்டமான பொய் என்று கூறினார். தோ்தல் களத்தில் உள்ள தலைவா்கள் சிலா் இத்தகைய போலித் தகவல்களை நம்பிப் பேசி, தங்களின் அரசியல் பிரசாரத்துக்காகப் பிரான்ஸைப் பகடைக் காயாகப் பயன்படுத்துவதை தங்களால் ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *