Murder: கணவன் தாக்கியதில் மனைவி உயிரிழப்பு!

குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட  வாக்குவாதத்தில் கணவன் தாக்கியதில் மனைவி உயிரிழப்பு.

சாயர்புரம்: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள தங்கம்மாள்புரம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜெயமாரி (வயது44). எலக்ட்ரீசியன். இவருக்குச் சந்தியா (33) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ஜெயமாரிக்கும், அவரது மனைவி சந்தியாவுக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயமாரி, சந்தியாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் சந்தியா சாப்பிடாமல் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை ஜெயமாரி ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர் தேவசகாயம் மற்றும் போலீசார் சந்தியா உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஜெயமாரியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *