mk stalin:இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் முழுவதும் ஜெயில்! சொத்து பறிமுதல்..புதிய சட்டம்!

Advertisements

கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 70ஐ நெருங்கியுள்ளது. பலர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறன்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் கருப்பு உடையில் வந்து தொடர் அமளியில் ஈடுபட்டனர். பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் எனக் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், கள்ள சாராய குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்குவதற்கான சட்ட திருத்தம் சட்டப்பேரவையில் இன்று அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கூயிருந்தார். அதன்படி இன்று கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்.

அதில் விஷச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதைத் தயாரிப்பது விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ரூ.10 லட்சம் ரூபாய் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *