
பாண்டிச்சேரியில் உள்ள PVR திரையரங்கத்திற்க்கு புரமோஷனுக்காக வந்த நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஏ.எல்.விஜய் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டுகளித்தனர்,
பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த 12ம் தேதி வெள்ளிக்கிழமை பல திரைப்படங்கள் வெளியாகின, அதே நாளில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் “மிஷன் சாப்டர் 1” திரைப்படமும் வெளியானது,
நடிகர் அருண்விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷம் சஜயன், குழந்தை நட்சத்திரம் இயல் நடித்த இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், நடிகர் அருண் விஜய் நேற்று சென்னையில் பல திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து இன்று மதியம் பாண்டிச்சேரியில் உள்ள PVR திரையரங்கத்திற்க்கு புரமோஷனுக்காக வந்த நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஏ.எல்.விஜய் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டுகளித்தனர், மேலும் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தை ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
பொங்கல் விடுமுறைக்கு வெளியான திரைப்படங்களில் மிஷன் சாப்டர் 1 திரைப்படம் சிறப்பாகவும் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும் திரைப்படமாக உள்ளது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


