Milk Price Hike: பால் விலைதிடீர் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் செயல்படும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில்,பால் விற்பனை விலையினை ஓசையின்றி உயர்த்தப்பட்டுள்ளதால் ‘பொதுமக்கள் அதிர்ச்சி’ அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்  சங்கம்மாவட்டங்கள்தோறும் ,மாவட்டகூட்டுறவு பதிவாளர் தலைமையில், செயல்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியாளர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்துஅந்தந்த வட்டாரப் பகுதிகளில், தலைவர் மற்றும்இயக்குனர்களை தேர்வு செய்கின்றனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் முடிவடைந்தாலோ?அல்லது ஏதோ ஒரு காரணத்தால் நிர்வாகக் குழு கலைக்கப்பட்டாலோ?

மாவட்ட நிர்வாகக் குழுவினை கூட்டி, அனைத்து வட்டங்களிலும் செயல்படும் கூட்டுறவு பால் சங்கங்களுக்கும்நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது நடைமுறை விதி.

ஆனால் கடந்த ஆறு மாதங்களாகஅனைத்து “கூட்டுறவுத்துறைநிர்வாகக் குழுக்களுக்கான அதிகார  பதவிக் காலம்” காலாவதியாகிவிட்ட காரணத்தால், தற்போது உற்பத்தி மற்றும் விற்பனையை முடிவெடுக்கத் துறை சார்ந்த நிர்வாக அதிகாரிகள் இல்லை.

“செயலாச்சியர்” என ஒரு நிர்வாக அதிகாரியை அந்தந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு
தமிழக அரசு தற்காலிகமாக நியமனம் செய்துள்ளது.

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் கொள்முதல் செய்யும் பாலினைமாவட்ட பால்உற்பத்தியாளர்கள் (யூனியன்-ஒன்றியங்கள்)மூலமாக மாநில-அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்யும்.இந்தக் கூட்டுறவு சங்கங்களில், உள்ளூர் விற்பனை என்ற முறையில் பொதுமக்களுக்கு நேரடியாகபால் விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரைரூபாய்-40-க்கு விற்பனை செய்யப்பட்டஒரு லிட்டர் பசும்பாலின் விலை திடிரென-50- ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது!!இந்தத் திடீர் விலை உயர்வு.பொதுமக்களிடம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரமேரூரில் மட்டும் முறையான அரசு உத்தரவின்றி பால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது  பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை
ஏற்ப்படுத்தியுள்ளது,

கொள்முதல் விலையினைவிட லிட்டருக்கு ரூபாய்-18-கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது.நடைமுறை விதிகளின் படி'”கூட்டுறவு  பால் உற்பத்தியாளர்கள் சங்கம்  தன்னிச்சையாக முடிவெடுத்து விற்பனை விலையை”உயர்த்த முடியாது,

ஆனால் உத்தரமேரூர்  பகுதிகளில் செயல்படும் கூட்டுறவு சங்கம் தன்னிச்சையாக முடிவெடுத்து கூடுதல் விலைக்குப் பால் விற்பனை செய்வதாகப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்,

இந்நிலையில் தனியார் பால் உற்பத்தி விற்பனையாளர்கள் இதில் ஆதிக்கம் செலுத்திஉற்பத்தியாளரிடம் கொள்முதல் விலையினை உயர்த்தியும், விற்பனையில் தரத்தைக் காட்டி தன் சுய லாப நோக்கில், முன்னேறி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.இதனால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதுடன் விற்பனையும், பாதிக்கப்படுகிறது.

திடீர் பால் விலை உயர்வுகுறித்து பொதுமக்கள்  கூட்டுறவு பால் விற்பனை நிலையங்களில் பணியில் உள்ள  அலுவலர்களிடம் கேட்கையில், மாவட்ட அதிகாரிகளின், உத்தரவை அமல்படுத்தியுள்ளோம், ‘மாவட்ட அதிகாரிகளிடம்  கேட்கச் சொல்லி’ வலியுறுத்தியுள்ளனர்.

மாவட்ட கூட்டுறவு  சங்க பதிவாளர்- திருமதி- சர்குணத்திடம்,  உத்தரமேரூர் பகுதி மக்கள் தொலைபேசி வாயிலாகக் கேட்கையில், நுகர்வோர்களுக்குப் பால்விவையினைதமிழக அரசு உயர்த்த வில்லை, என்றும், அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக” அதிக லாபம் ஈட்டிடும் நோக்கில்!! விற்பனை விலையை” நிர்ணயித்ததாகவும்,’பால் விலை அதிகம் எனில், நுகர்வோர்கள் வீட்டு தேவைகளுக்கு வேறு எங்காவது தனியார் பால் நிறுவன- விற்பனை நிலையங்களில் பால் வாங்கிக் கொள்ளுமாறு’ கூறுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்,

கிராமப்புறபால் உற்பத்தியாளர்களுக்குமிகச் சிறிய அளவிலான ஊக்கத்தொகையினை வழங்கி விட்டு, ஏழை-எளிய மக்களின், அத்தியாவசிய உணவுப் பொருளான பால் விற்பனையில் மிகப்பெரிய தொகையினை தன்னிச்சையாக உயர்த்தி, ஏழை-எளிய அடித்தட்டு-மக்களின் வாழ்வாதாரத்திற்கு உளை வைக்கும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகத்தை எவ்வாறு?” தமிழகஅரசு சரிசெய்யப் போகிறது”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *