Meenakshi Govindarajan: காதல் ஸ்டோரியில்!

காதல் ஸ்டோரியில் நடிக்கும் மீனாட்சி!

சென்னை: ஸ்ரீ வாரி பிலிம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் படம், ‘காதலே காதலே’. இதில் மஹத் ராகவேந்திரா ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். மற்றும் பாரதிராஜா, கே.எஸ்.ரவிகுமார், விடிவி கணேஷ், ரவீணா ரவி நடிக்கின்றனர்.

ஆர்.பிரேம்நாத் எழுதி இயக்குகிறார். சுதர்சன் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். படம் குறித்து ஆர்.பிரேம்நாத் கூறுகையில், ‘இளமையில் இருந்து முதுமை வரை தவிர்க்க முடியாத அங்கமாக காதல் இருக்கிறது.


ஆனால் காதலிப்பதும், அந்த துணையுடன் வலுவான உறவில் இருப்பதும் காலப்போக்கில் மாறிவிட்டது. ‘காதலே காதலே’ தற்போதைய தலைமுறையின் வாழ்க்கை, காதல், உறவுகள் பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தை திரையில் காண்பிக்க இருக்கிறது. பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய காதல் கொண்டாட்டமாக இப்படம் இருக்கும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *