Advertisements

மதிமுக பாரதிய ஜனதா கட்சி இடையே கூட்டணி குறித்து பேசி முடிவெடுத்து விட்டார்கள் என நாஞ்சில் சம்பத் அதிரடி தகவல்களை வெளியிட்டுள்ளார். முன்பு எப்போதும் இல்லாத வகையில் வைகோ தலைமையிலான மதிமுகவில் மிகப்பெரிய அக்கப்போர் நடைபெற்று வருகிறது . முன்னதாக நாஞ்சில் சம்பத்தை தூக்கி எறிந்த மதிமுக தற்பொழுது மல்லை சத்யாவையும் தூக்கி எறிந்து இருக்கிறது
விடுதலைப் புலிகள் அமைப்பில் மாத்தையா போல் மல்லை சத்தியா என் நெஞ்சில் குத்திவிட்டார் என வைகோ கொந்தளிக்க தலைவரே இதற்கு பதிலாக ஒரு பாட்டில் விஷம் வாங்கித் தந்திருக்கலாம் நான் சந்தோசமாக குடித்திருப்பேன் என மல்லை சத்தியா பதில் பேச மதிமுகவில் என்னதான் நடக்கிறது என மக்கள் மத்தியில் தலையைப் பிய்த்துக் கொண்டு திரிகிறார்கள்
வைகோவின் வாரிசான துரை வைகோவை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக மதிமுகவில் சூதாட்டம் நடைபெறுகிறது என்ற பேச்சு நடைபெறும் சூழ்நிலையில் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ள தகவல்கள் மிகவும் பேரிடியாக அமைந்துள்ளன. இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் பேசும்பொழுது மதிமுகவில் வைகோ துரை வைகோ தவிர மற்ற அனைவரும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்
அதிமுக பாஜகவிடம் விலை போய்விட்டது துரை வைகோவை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்பதற்காக வைகோ பாஜகவுடன் பேசி முடிவு செய்து விட்டார் துரை வைகோவுக்கு அதிகாரப்பசி ஆட்டி படைக்கிறது . மதிமுகவை பொறுத்த வரையில் நெருப்பில் கூட படுத்து தூங்கலாம் ஆனால் வைகோவுடன் மனிதன் குடியிருக்க முடியாது என கட்சியினரே பேச ஆரம்பித்து விட்டார்கள் மதிமுகவை பொருத்தவரையில் அந்த கட்சி அஸ்தமனம் ஆகிவிட்டது
துரை வைகோ மத்திய அமைச்சராக வேண்டுமென ஆசைப்பட்ட நிலையில் அதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது . வருகிற தேர்தலில் மதிமுகவுக்கு 12 சீட்டுகள் வாங்கி தருகிறோம் இது தவிர மத்திய அமைச்சரவையில் பதவி தருகிறோம் என பாஜகவுடன் கூட்டணி பேச்சு முடிந்து விட்டது . வைகோவிடம் பத்தாயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என்று நாஞ்சில் சம்பத் பேசியிருக்கிறார்
அவரது பேச்சு புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான சுப்பையா இது குறித்து தென்காசி காவல்துறை அதிகாரியிடம் ஒரு புகார் மது கொடுத்து இருக்கிறார்
அதில் மூத்த அரசியல் தலைவர் வைகோ மீதும் துரை வைகோ மீதும் நாஞ்சில்சம்பத் காழ்ப் புணர்ச்சியில் பேசியிருக்கிறார் அவரது பேச்சு சுதந்திரத்தை மீறி திட்டமிட்டு வன்மத்தோடு இருக்கிறது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்திருக்கிறது எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்துள்ளார் . தற்பொழுது மதிமுகவில் நாஞ்சில் சம்பத் பேச்சு தான் மிகப்பெரிய பேச்சாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements



