Iswarya Menon: பிங்க் நிற சேலையில் கவர்ச்சி போஸ்!

பிங்க் நிற சேலையில் விதவிதமாகக் கவர்ச்சி போஸ் கொடுத்து நடிகை ஐஸ்வர்யா மேனன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

ஐஸ்வர்யா மேனன் எனப் பெயரைக் கேட்டதும் இவர் கேரள நடிகையெனப் பலரும் நினைக்கலாம். ஆனால் இவர் பக்கா தமிழ் பொண்ணு. நடிகை ஐஸ்வர்யா மேனன் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோட்டில் தான்.

ஈரோட்டில் பள்ளிப்படிப்பை முடித்த ஐஸ்வர்யா, கல்லூரி படிப்பைச் சென்னையில் முடித்தார். இன்ஜினியரிங் படித்த ஐஸ்வர்யாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் இருந்து வந்தது. இதனால் சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார்.

ஆரம்பத்தில் தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்த ஐஸ்வர்யா மேனன், வீரா படம்மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து தமிழ்படம் 2-வில் சிவாவுக்கு ஜோடியாக நடித்தார்.

பின்னர் சினிமாவில் பட வாய்ப்புகளைப் பிடிப்பதற்காகக் கிளாமர் போட்டோஷூட்டில் இறங்கிய ஐஸ்வர்யா, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி பொங்க போட்டோக்களைப் பதிவிட்டு இளசுகளை கவரத் தொடங்கினார்.

ஐஸ்வர்யாவின் புகைப்படங்கள் இயக்குனர் சுந்தர் சி வசம் கிடைக்க, அவர் தான் தயாரிக்கும் நான் சிரித்தால் படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாவை கமிட் செய்தார்.

நான் சிரித்தால் படத்தில் கவர்ச்சியில் புகுந்து விளையாடிய ஐஸ்வர்யாவுக்கு அப்படத்தின் வெற்றி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து அசோக் செல்வனுடன் வேழம் படத்தில் நடித்தார்.

தற்போது தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலுமே பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், பஞ்சுமிட்டாய் நிற சேலையில் கண்ணைக்கவரும் பார்பி டால் போல் போஸ் கொடுத்தபடி நடிகை ஐஸ்வர்யா மேனன் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *