Matthew Miller: இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி மீண்டும் மூக்கை நுழைத்த அமெரிக்கா!

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதுகாங்கிரசின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என மீண்டும் அமெரிக்காவுக்குகருத்து தெரிவித்து உள்ளது.

வாஷிங்டன்: டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் கருத்து தெரிவித்த அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து இருந்தது. இருப்பினும் இந்த விவகாரத்தில் அந்நாடு மீண்டும் கருத்து தெரிவித்து உள்ளது.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்த நிலையில், அதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக டில்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிக்கு ‛ சம்மன்’ அனுப்பி நேரில் அழைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாத்யூ மில்லர் கூறுகையில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். காங்கிரசின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டதாகவும், அதனால், தேர்தல் பிரசாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டு குறித்தும் அறிந்துள்ளோம்.

அனைத்து பிரச்னைகள் குறித்தும் நேர்மையான வெளிப்படையான, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *