Malaysia Masters Badminton:பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

Advertisements

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு பி.வி. சிந்து முன்னேறி அசத்தியுள்ளார்.

கோலாலம்பூர்:மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்து வீராங்கனையான ஓங்பாம்ருங்பன் உடன் பலப்பரீட்சை நடத்தினார். இருவரும் சரி சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்றது.

இதில் முதல் செட்டை ஓங்பாம்ருங்பன் கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை சிந்து கைப்பற்றினார். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அந்தச் செட்டை பி.வி.சிந்து கைப்பற்றி வெற்றி பெற்றார். முடிவில் சிந்து 13-21, 21-16 மற்றும் 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *