
மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் முன்னிட்டு டெல்லி ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்தினர். பின்னர், பிரதமர் மோடி பேசியபோது, வளர்ந்த பாரதத்தை உருவாக்கும் முயற்சியில் காந்தியின் வழிகளை தொடர்ந்து பின்பற்றுவோம் என்றும் தனது லட்சியங்களால் மனித வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த காந்திக்கு மரியாதை செலுத்துவோம் என்றும் தெரிவித்தார்.
தைரியம் மற்றும் எளிமை ஒரு பெரிய மாற்றத்திற்கான கருவியாக மாறும் என நிரூபித்தவர் மகாத்மா காந்தி என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
இதனையடுத்து, மக்களின் சேவை, இரக்கம் ஆகியவற்றை முக்கியமாக கருதியவர் மகாத்மா காந்தி என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
