சாஸ்திரங்களின்படி 300 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அபூர்வ மகா சிவராத்திரி முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் களியங்காடு சிவன் கோயிலில்சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் நிகழும் மகா சிவராத்திரி இந்த ஆண்டு 300 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அபூர்வ மகா சிவராத்திரி விழாஇன்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் களியங்காடு சிவன் கோயிலில்இன்று காலை முதலேசிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு தீபாரணைகள்
தொடர் பூஜைகள்நடைபெற்று வருகின்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஈசனுக்கு உகந்த நாள் ஆன இன்றுவிரதம் இருந்து வழிபட்டால் நீங்காத துன்பம் தீராத வியாதிகள் குறையாத கடன்கள் அனைத்தும் சேர்ந்து குடும்ப ஒற்றுமை மேலோங்கிவாழ்வில் இனிமையும் மகிழ்ச்சியும் நீடிக்கும் எனச் சான்றோர்கள் கூறுகின்றனர் அந்த வகையில் விரதம் இருந்த பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பின்னர்நடைபெற்று வரும் அன்னதானங்களிலும்கலந்து கொண்டனர்.இன்று பகல் முழுவதும் நடைபெறும் தொடர் பூஜைபோல மகா சிவராத்திரி ஆன இன்று இரவும் விடிய விடியத் தொடர் பூஜைகள் இருந்து வருவதால் குமரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலில்பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.


