
மத்தியபிரதேசத்தில் நவம்பர் 17- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. 71.6 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது ஷிவ்ராஜ் சிங்க் சவுகான் முதல்வராக உள்ளார்.
அம்மாநிலத்தில் நிறைய கட்சிகள் போட்டியிட்டாலும் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. அப்போது நிறைய வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க சென்றனர். ஒரு சில தொகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேர்தலை தொடர்ந்து நிறைய இடங்களில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளது. கட்சி தொண்டர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. இதனிடையில் ராஜ்கரில் நடைபெற்ற வன்முறையில் பாஜக வைச் சேர்ந்த நான்கு பேர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவைச் சேர்ந்த நான்கு பேரும் நதல்புரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பயோரா தொகுதிக்காக சென்றதும் தெரிய வந்தது. பாஜக தலைவர் அமித் ஷர்மாவும் காயமுற்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பேசிய பாஜக நிர்வாகி காங்கிரஸார் தோல்வி பயத்தில் வேண்டுமென்றே தாக்கியதாக கூறினார். அந்த தொகுதி வேட்பாளர் நாராயன் சிங் காயமடைந்தவர்களை நேரில் ஆறுதல் கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

