M. K. Stalin – Coimbatore: முன்னாள் ராணுவ வீரர்களுக்குக் குட் நியூஸ்!

முன்னாள் ராணுவ வீரர்களுக்குச் சொத்து, வீட்டு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, முன்னாள் ராணுவ வீரர் வருமான வரி செலுத்துபவராக இருந்தால் இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: கடந்த மாதம் 19ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, முன்னாள் ராணுவ வீரர்களுக்குச் சொத்து, வீட்டு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டிலிருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்குச் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்துத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, முன்னாள் ராணுவ வீரர் வருமான வரி செலுத்துபவராக இருந்தால் இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ வீரர்களுக்குச் சொத்து, வீட்டு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *