
தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும், மக்களவை தேர்தலில் நடிகர் விக்ரம் மற்றும் சூர்யா ஆகியோர் வாக்களித்துள்ள புகைப்படங்கள் வெளியானது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் நீண்ட வரிசையில் பொதுமக்களுடன் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இன்று காலை, முதல் ஆளாக வந்து தல அஜித் திருவான்மியூர் வாக்கு சாவடியில் வாக்களித்த நிலையில் இவரைத் தொடர்ந்து, சற்று முன் தளபதி விஜய் ரஷ்யாவிலிருந்து வந்து தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவு செய்தார்.
மேலும் அடுத்தடுத்து முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களித்து விட்டு, இதுகுறித்த புகைப்படத்தைக் குடும்பத்தோடு, தனியாகவும் வெளியிட்டு வருகின்றனர்.
தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் காலையிலேயே வாக்களித்துத் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்!
அந்த வகையில், தற்போது நடிகர் விக்ரம் சற்று முன் பெசன்ட் நகரில் உள்ள வாக்கு சாவடிக்கு மிகவும் எளிமையாக வந்து, தன் வாக்கினை வரிசையில் நின்று பதிவு செய்தார்.
அதே போல், மும்பையில் செட்டில் ஆனாலும்… ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக நடிகர் சூர்யா சென்னை வந்து, தன்னுடைய தந்தை சிவகுமார் மற்றும் தம்பி கார்த்தியுடன் வந்து வாக்களித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

