Lok Sabha Elections 2024: விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துள்ளது.

புதுடெல்லி: தேர்தல்களில் ‘விவிபாட்’ எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களில் ஏதேனும் சில எந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ணி, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகளுடன் சரிபார்க்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் 3 அமைப்புகள் மனுக்கள் தாக்கல் செய்தன.

இம்மனுக்கள் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.  எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில்,  வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *