
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
சென்னை: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்குத் தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி பங்கீட்டின்போது 10 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டாலும் எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த தேர்தலின்போது போட்டியிட்ட 7 தொகுதிகளும், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நெல்லை ஆகிய 3 தொகுதிகள் புதிதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: திருவள்ளூர்(தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
வேட்பாளரின் உத்தேச பட்டியல்:
வ.எண் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்
1 திருவள்ளூர்(தனி) சசிகாந்த் செந்தில் அல்லது முன்னாள் எம்பி விஸ்வநாதன்
2 கடலூர் கே.எஸ்.அழகிரி
3 மயிலாடுதுறை பிரவீன் சக்கரவர்த்தி, திருநாவுக்கரசர் அல்லது சுரண்யா ஐயர்
4 சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம்
5 திருநெல்வேலி பீட்டர் அல்போன்ஸ்
6 கிருஷ்ணகிரி எம்.பி செல்லக்குமார்
7 கரூர் எம்.பி ஜோதிமணி
8 விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர்
9 கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த்
10 புதுச்சேரி எம்.பி வைத்தியலிங்கம்
கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.


