Lok Sabha Election 2024: மகளிர் உரிமைத் தொகை டாஸ்மார்க்கும், மீதி சைடிசுக்கும் தான் செல்கிறது!

எல்கேஜி படிக்கும் குழந்தைக்குக் கூடத் திமுக அரசு வந்ததிலிருந்து பாதுகாப்பு இல்லையென அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர். இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இ. ராஜசேகர் காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகளைச் சேகரித்து வருகிறார். களக்காட்டூர், குருவிமலை, பலத்தோட்டம், ஐயங்கார் குளம், கோளிவாக்கம், ஆசூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில்  இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, வி சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு அதிமுகவிற்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளைச் சேகரித்தனர். திறந்தவெளி வாகனத்தில் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் வளர்மதி பேசியதாவது: எல்கேஜி படிக்கும் குழந்தைக்குக் கூடத் திமுக அரசு வந்ததிலிருந்து பாதுகாப்பு இல்லை அயோக்கியர்கள் , காவல்துறை உதவியுடனே குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள்.

இது எல்லாத்துக்கும் காரணம் கஞ்சா தான் கஞ்சா காவல்துறை உதவியுடனே விற்கப்படுகிறது .  தவறு செய்பவர்களைப் பிடித்து விசாரித்தால் , கஞ்சா போதையில் செய்துவிட்டேன் எனக் கூறுகிறார்கள் . அடுத்ததாக இரண்டு ஆண்டுகள் மகளிர் உரிமை திட்டம் தர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொடுத்த அழுத்தத்தால் ஒரு சில பேருக்குக் கொடுத்திருக்கிறார்கள் . வீட்டில் பையன் வேலை செய்தால் ஆயிரம் ரூபாய் இல்லை, சைக்கிள் இருந்தால் ஆயிரம் ரூபாய் இல்லையெனப் பல்வேறு காரணத்தைக் கூறி தகுதி இல்லையெனக் கூறுகிறார்கள் .

பெண்ணாக இருந்தாலேஒ, தகுதி தானே அதைவிட வேறு என்ன தகுதி வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். அப்படி வரும் ஆயிரம் ரூபாயை கூடப் பெண்கள் அவர்கள் தேவைக்குப் பயன்படுத்த முடியவில்லை அதை ஆண்கள் பிடுங்கிக் கொண்டு சென்று 500 ரூபாய் சரக்கும் 500 ரூபாய் சைடிஷ்க்கும் சென்று விடுகிறது . முட்டை ,சிக்கன் ஆகியவற்றை சைட் டிஷ்ஷாக வாங்கி கொள்கிறார்கள் ” எனப் பேசிப் பெண் வாக்காளர்கள்  மத்தியில் வாக்குகளைச் சேகரித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *