Lok Sabha Election 2024: தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

டெல்லி: நாடு முழுவதும் நடைபெறும் மக்களவை முதற்கட்டத் தேர்தலில் 102 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு.

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. 2024 மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அனைத்துக் கட்டங்களையும் விட அதிகப்பட்சமான தொகுதிகளை முதல் கட்டம் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மும்முரமாக நடைபெற்றது. காலை முதல் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கைச் செலுத்தினர்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் புதுச்சேரியென மொத்தம் 40 தொகுதிகளில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவிகிதம் வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலரவப்படி 63.20 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

5 மணி வரையிலான மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு

தருமபுரி – 67.52%

நாமக்கல் – 67.37%

ஆரணி – 67.34%

கள்ளக்குறிச்சி – 67.23%

கரூர் – 66.91%

சிதம்பரம் – 66.64%

பெரம்பலூர் – 66.56%

திருவண்ணாமலை – 65.91%

சேலம் – 65.86%

அரக்கோணம் – 65.61%

வேலூர் – 65.12%

விழுப்புரம் – 64.83%

கிருஷ்ணகிரி – 64.65%

ஈரோடு – 64.50%

திண்டுக்கல் – 64.34%

நாகை – 64.21%

கடலூர் – 64.10%

நீலகிரி – 63.88%

விருதுநகர் – 63.85%

மயிலாடுதுறை – 63.77%

பொள்ளாச்சி – 63.53%

தேனி – 63.41%

தென்காசி – 63.10%

தூத்துக்குடி – 63.03%

ராமநாதபுரம் – 63.02%

தஞ்சாவூர் – 63.00%

கன்னியாகுமரி – 62.82%

சிவகங்கை – 62.50%

திருச்சி – 62.30%

காஞ்சிபுரம் – 61.74%

திருவள்ளூர் – 61.59%

கோவை – 61.45%

திருப்பூர் – 61.43%

திருநெல்வேலி – 61.29%

மதுரை – 60.00%

ஸ்ரீபெரும்புதூர் – 59.82%

வடசென்னை – 59.16%

மத்திய சென்னை – 57.25%

தென்சென்னை – 57.04%

மொத்த வாக்குப்பதிவு – 63.20%

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு – 56.68%

தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவிகிதம் வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலரவப்படி 63.20 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாகக் கள்ளக்குறிச்சியில் 72.44 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *