
புதுடெல்லி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நாள் முழுவதும் நடைபெறுகின்றன. இந்தத் தேர்தலுடன் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டசபையில் தேர்தலும் நடைபெறுகிறது.
அத்துடன் 12 மாநிலங்களில் காலியாக இருக்கும் 25 சட்டமன்ற தொகுதிகளுக் கான இடைத் தேர்தலும் இந்த காலகட்டத்தில் நடைபெறுகின்றன.
இதையொட்டி நாடு முழுவதும்ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணியிலிருந்து ஜூன் 1ஆம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் முடிந்ததும் கள நிலவரம் குறித்த கருத்துக் கணிப்புகள் நடத்தவோ தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவுகளின் கீழ் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரங்களுக்கு முன்பாக கருத்துக்கணிப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற மக்களவையின் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதியும் மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தல் மே 13ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தல் மே இருபதாம் தேதியும் ஆறாம் கட்ட தேர்தல் மே 25ஆம் தேதி ஏழாம் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது . வாக்கு எண்ணிக்கை தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஜூன் 4-ம் தேதி நடைபெறும். அன்றே முடிவுகள் அனைத்தும் வெளியாகி மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்துவிடும்.
தமிழ்நாட்டில் 6 கோடி வாக்காளர்கள் தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை ஆறு கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348. இவர்களில் ஆண்கள் 3 கோடியே மூன்று லட்சத்து 96 ஆயிரத்து 330. பெண்கள் மூன்று கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724. மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 294.
மொத்தம் அமைக்கப்படும் பத்து லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குச்சாவடிகளில் 55 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். தேர்தல் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் ஒரு கோடியே 50 லட்சம் பேர்.


