
தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.
அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்குச் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 4-ம் கட்டமாக 175 தொகுதிகள் கொண்ட ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது. அதோடு, ஒடிசா மாநிலத்திற்கும் மே 13-ம் தேதியே சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் ஜூன் 4 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விளவங்கோடு உள்ளிட்ட 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விளவங்கோட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.


