Lok Sabha Election 2024: அமேதி, ரேபரேலியில் ராகுல் – பிரியங்கா போட்டியா? காங்கிரஸ் முடிவில் தாமதம் ஏன்?

Advertisements

புதுடெல்லி: ராகுல் காந்தி பிரியங்கா இருவரும் உத்தர பிரதேச மாநிலம் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவது பற்றி முடிவு எடுப்பதில் காங்கிரஸ் கட்சியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேசம் அமேதி தொகுதியிலும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். வயநாட்டில் வெற்றி பெற்ற அவர் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளரான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.

இந்தத் தேர்தலில் ராகுல் பிரியங்கா இருவரும் உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து போட்டியிட வேண்டும் என்று அந்த மாநில காங்கிரஸ் வலியுறுத்தி இருந்தது. சமாஜ்வாடி கட்சி உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பதால் அவர்கள் இருவரும் வெற்றி பெறுவது நிச்சயம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.

அத்துடன் அவர்கள் இருவரும் களத்தில் நிற்பது மாநிலத்தில் மற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் புதிய உத்தியோகத்தை கொடுக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் கேரளாவில் வயநாடு தொகுதியில் இருந்து அவர் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது.

இருப்பினும் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்திலும் போட்டியிட வேண்டும் என்று அந்த மாநில கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மொத்தம் 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 63 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி களம் காண்கிறது.

17 தொகுதிகளில் இதுவரை 14 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டது. ராகுல் மற்றும் பிரியங்காவின் அமேதி ரேபரேலி தொகுதிகளுடன் பிரயாக்ராஜ் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டுமே இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும்.

உத்தரபிரதேசத்தில் வேற்றுமை தாக்கல் செய்வதற்கு இன்னும் நாட்கள் இருப்பதால் அந்த இரு தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவிப்பதில் அவசரம் இல்லை என்று காங்கிரஸ் கருதுகிறது. மாநிலத் தலைமை அவர்கள் இருவரும் போட்டியிட வலியுறுத்தி இருந்தாலும் இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது காந்தி குடும்பத்தினர் தான் என்று உத்தரப்பிரதேச மாநில பொறுப்பு வகிக்கும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் அவினாஷ் பாண்டே கூறினார்.

இந்த இரு இரு தொகுதி வேட்பாளர்கள் பற்றி காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு இருந்தாலும் அதில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் சோனியாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக மேலிட வட்டார தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையில் பிரியங்காவுக்கு பதிலாக ரேபரேலி தொகுதியில் அவருடைய கணவர் ராபர்ட் வகையறா போட்டியிட விரும்புவதாக கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. எனவே இது தொடர்பாக சோனியா காந்தி விரைவில் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *