அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு!

சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், தனது மனைிவகளுடன் உல்லாசமாக இருந்ததையும் வீடியோவாக எடுத்து ரசித்ததாகப் போலீஸார் அவருடைய செல்போனிலிருந்து பறிமுதல் செய்த வீடியோக்கள்மூலம் அம்பலமாகியுள்ளது.

ஞானசேகரனை போலீஸார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23 ஆம் தேதி மாணவி ஒருவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்குத் திருட்டுத்தனமாக வந்த நபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம்குறித்து அந்த மாணவி போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் ஞானசேகரன் என்பவர்மீது 8 பிரிவின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்த கோட்டூர்புரம் போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கைதான ஞானசேகரனின் செல்போனை போலீஸார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அந்தப் போனில் எந்த வீடியோக்களும் இல்லை. இதனால் சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் அந்தச் செல்போன் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோவைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த விவகாரம்குறித்து போலீஸார் விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் ஞானசேகரன் டிப்ளமோ படித்துள்ளாராம். அவர் படிக்கும் போதே பல பெண்களைக் காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உல்லாசமாக இருந்தாராம்.

அப்படி இருக்கும்போது தனது செல்போனிலேயே வீடியோ எடுத்துக் கொள்வாராம். பிறகு அதைத் தனியாக இருக்கும் நேரத்தில் பார்த்து ரசிப்பாராம். செல்போனில் ரகசியமாக ஒரு ஃபோல்டரில் பாஸ்வேர்டு போட்டு வீடியோ வைத்துள்ளாராம்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் போலீஸார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்பதை அறிந்த ஞானசேகரன், அந்த வீடியோவையும் எடுத்து அந்த ஃபோல்டரில் போட்டுள்ளார்.

இதனால்தான் அவரைக் கைது செய்தபோது அவருடைய செல்போனில் எந்த வீடியோவும் இல்லாமல் இருந்தது. தனக்கு 4 திருமணங்கள் ஆனாலும் வாரத்திற்கு 4 நாட்களுக்குப் பாலியல் தொழிலாளிகளிடம் சென்று உல்லாசமாக இருந்துவிடுவாராம். மேலும் தனது மனைவிகளுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளையும் கூடச் செல்போனில் வீடியோவாக எடுத்துத் தனியாக இருக்கும்போது அதைப் பார்த்து ரசித்து வந்தாராம்.

வேறு வழிகளிலான உடலுறவிலும் ஞானசேகரனுக்கு நாட்டம் அதிகமாக இருந்ததாம். திருநங்கைகளுடனும் ஞானசேகரனுக்கு பழக்கம் ஏற்பட்டதாம்ய இந்த நிலையில் அவருடைய செல்போனில் இளம்பெண்கள், திருநங்கைகள், பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள், புகார் அளித்த மாணவியின் வீடியோவும் இருந்ததாம்.

ஞானசேகரனின் போனிலிருந்து கைப்பற்றப்பட்ட வீடியோவில் யாரேனும் மாணவிகள் இருக்கிறார்கள் என விசாரணை நடத்தப்படுகிறதாம். இதற்காக 5 நாட்கள் அவரைப் போலீஸ் காவலில் எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *