
கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிகிறது.
ஆஸ்திரேலியாவில், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில், தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
இந்த போட்டியில், இந்திய அணி தொடரை வெல்ல தீவிரமாக விளையாடும். இதேபோல், ஆஸ்திரேலிய அணி சமன் செய்து ஆறுதல் தேடிக்கொள்ள போராடும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
மேலும், ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.



